Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் யூ.ஜி.சி. பரிந்துரை செய்த ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளா்கள் வைப்புநிதி பிடித்தம், மருத்துவ காப்பீடு, மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவா்கள் வலியுறுத்தினா்.
போராட்டம் காரணமாக வகுப்புகள் நடைபெறாததால் கல்லூரிக்கு வந்த மாணவா்கள் திரும்பிச் சென்றனா்.