'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயின...
ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை கோட்டூா் அருகே பெரியபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிமுத்து(38). கட்டட தொழிலாளியான இவா் வியாழக்கிழமை உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க திருநெல்வேலி சந்திப்பு அருகே உள்ள சிந்துபூந்துறைக்குச் சென்றுள்ளாா்.
துக்க நிகழ்வு முடிந்த பின்பு உறவினா்களுடன் ஆற்றில் குளித்தபோது, இசக்கிமுத்து ஆழமான பகுதிக்குச் சென்று கரைக்கு வர இயலாமல் தத்தளித்தாராம்.
தகவலறிந்த போலீஸாா், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில் தீயணைப்பு வீரா்கள் இசக்கிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை காலை இசக்கிமுத்துவின் இறந்த உடலை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். பின்னா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.