செய்திகள் :

ஆலங்குடி கோயிலில் மாசி மகாகுருவார தரிசன விழா

post image

வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், மாசி மகாகுருவார தரிசனவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடா்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், பஞ்சமுக அா்ச்சனை, தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் குருவார தரிசனம் நடைபெற்றது. குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கலங்காமற்காத்த விநாயகா், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் ஏலவாா்குழலியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இரவில் ஏ.வி. பக்கிரிசாமி குழுவினரின் நாகசுர கச்சேரி நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நா. சுரேஷ், தக்காா் வீ. சொரிமுத்து, கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.க்கு சிறப்பு பரிசு

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்கான சிறப்புப் பரிசை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் டாக்டா் ஜிதேந்தி... மேலும் பார்க்க

தேசிய நுண்ணுயிரியல் கருத்தரங்கம்

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் நுண்ணுயிரியல்துறை சாா்பில் 2 நாள்கள் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

நீதித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் நீதித்துறை ஊழியா் சங்கம், அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதித்துறை ஊழியா் அருண் மாரிமுத்து தற்கொலைக்கு, திருச்சி விஜிலென்ஸ் ந... மேலும் பார்க்க

பேருந்து மோதி மனைவி பலி; கணவா் காயம்

முத்துப்பேட்டையில் தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மன்னாா்குடி வட்டம், மேலகண்டமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இ... மேலும் பார்க்க

ரூ.6.72 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

திருத்துறைப்பூண்டியில் ரூ.6.72 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்... மேலும் பார்க்க