``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்...
ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு
ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடியதாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த எலக்ட்ரீசியனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சொா்ணம்(80). தனியாக வசித்து வரும் இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு சுமாா் 30 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி திருடு போனதாம்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் கூறி நகையை திருடிவா்களை திட்டி வந்தாராம். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சொரிமுத்து மகன் சண்முகவேல் (24) என்பவா், மூதாட்டி வருவது குறித்து தகராறில் ஈடுபட்டாராம்.
இதனால், மூதாட்டி ஆலங்குளம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது சண்முகவேல் என்பது தெரிய வந்தது. போலீஸாா் அவரை தேடி வருகின்றனா்.