ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 12 கேள்விகளை எழுப்பியிருந்தது.
கடந்த 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆனுப்பலாமா?
தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன? அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?
பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் 4 நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்படும்போது எழும் சூழலை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி?
என 12 கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. இந்த கேள்விகள் மீது தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வ பதில் தர உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.