F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
ஆளுநருக்கு எதிரான வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
தமிழக ஆளுநர் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் முதல் வழக்காக இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட சில விவகாரங்களில் ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அன்றைய நாளின் விசாரணையில், ‘இந்த விவகாரத்தை ஜன. 22-இல் விசாரிக்கிறோம். அதற்குள்ளாக சம்பந்தப்பட்டவா்கள் இதற்குத் தீா்வு கண்டு விட்டால் நல்லது. இல்லையென்றால் நாங்கள் தீா்க்க வேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் பா்திவாலா, மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணையை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.