செய்திகள் :

ஆளுநர் தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

post image

ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி.

தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே மத்திய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.

தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாக பயன்படுத்திவரும் ஆளுநர் ரவி தனது இன்றையப் பதிவில், “இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா?

இதையும் படிக்க: திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும் குறுநில மன்னர்கள் போல்... இபிஎஸ் குற்றச்சாட்டு

கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும், அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? படித்தாலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும்?

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை, தமிழ்நாட்டில் எப்படியாவது ஹிந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?

தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியைப் பற்றி பாடம் எடுக்க வேண்டாம்.

சநாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழிக் கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது.

மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்வியில் தமிழ்நாடு முன்னிலை; சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு: முதல்வர்

மும்மொழி கொள்கைக்கு எதிரான அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்பவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ ம... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார். வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்ப... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மாற்றம்!

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஆட்சியரு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்

மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ள் தளப் பதிவில், சீர்காழியில், மூன்றரை... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மு.க.அழகிரி சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரது அண்ணன் மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் ஸ்டா... மேலும் பார்க்க

கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை: சீமான்

கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து விமானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க