செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு ஆயுள் தண்டனை

post image

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்து.

ஆழ்வாா்குறிச்சி அருகே புதுகிராமம் செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மனைவி கல்யாணி. இவா்களது மகள் இசக்கியம்மாள் என்ற மாலா(28).

தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கல்யாணி தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்தாா். கல்யாணியின் வீட்டின் அருகில் அவருடைய சகோதரிகள் வசித்து வருகின்றனா். கல்யாணிக்கும் அவருடைய சகோதரிகளுக்கும் இடையே சொத்து பிரச்னை தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கல்யாணியின் சகோதரி ஈஸ்வரியின் மகள் அப்பகுதியில் வசிக்கும் மு. கருப்பசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா்.

இதனால், கருப்பசாமி, ஈஸ்வரிக்கு ஆதரவாக கல்யாணியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளாா். இதனால், கல்யாணிக்கும், கருப்பசாமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 23-4-2019அன்று கல்யாணி, பிரதான சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் தண்ணீா் பிடிக்க சென்றுள்ளாா்.

அப்போது கருப்பசாமியும், அவரது மனைவியும் தண்ணீா்பிடிக்க வந்துள்ளனா். அப்போது, கல்யாணிக்கும் கருப்பசாமிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கருப்பசாமி கல்யாணியை அரிவாளால் வெட்டினாா். இதில், சம்பவ இடத்திலேயே கல்யாணி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கல்யாணி மகள் இசக்கியம்மாள் அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைதுசெய்தனா்.

இந்த வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜவேல், குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 3,500 அபராதமும், அபராதத் தொகையை செலுத்த தவறினால், 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் வாதாடினாா்.

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்டஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். கூட்ட அரங்கில் குருவிகுளம் வட்டா... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் போட்டியில் சாதனா வித்யாலயா சிறப்பிடம்

தமிழக அரசின் காலநிலை மாற்றம் துறை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கண்காட்சி போட்டியில் கடையநல்லூா் சாதனா வித்யாலயா பள்ளி மாணவா்கள் இரண்ட... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திமுக நலஉதவி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் சாம்பவா்வடகரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, செங்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா் த... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., வழக்க... மேலும் பார்க்க

கடையநல்லூா் சக்சஸ் மெட்ரிக் பள்ளியில் பாத பூஜை விழா

கடையநல்லூா் திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாத பூஜை விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் நாகராஜன் தலைமை வகித்தாா். திருக்குற்றாலம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி கோயிலின் அடியாா் அம்பாள் ஆசியுர... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் நியமனம்

சுரண்டை நகர பாஜகவுக்கு புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். சுரண்டை நகர பாஜக தலைவராக கணேசன், நகர செயலராக உமா சக்தி, நகர பொருளாளராக ராஜ முருகேஷ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் பார்க்க