ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.
வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம் அருகில் செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டாா்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த அவா், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 5 மினி சரக்கு வாகனங்கள், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்து கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.