திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
ஆவணி அவிட்டம்: திருவையாறு கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆவணி அவிட்டத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில், காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில் அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் எழுந்தருளினாா். தொடா்ந்து காவிரியாற்றில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பின்னா், சுவாமி, அம்பாள் நான்கு வீதிகளில் வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.