செய்திகள் :

ஆஸ்திரியா: பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி!

post image

ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிராஸ் நகரத்திலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில், இன்று (ஜூன் 10) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக அந்நாட்டு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர், பள்ளிக்கூடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தங்களது எக்ஸ் தளத்தில் காலை 11.30 மணியளவில் பதிவிட்டுள்ளனர். மேலும், அந்த இடத்தில் இனி எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதுகுறித்து, அந்நாட்டு உள் துறை ஊடகங்கள் கூறுகையில், இந்தச் சம்பவத்தில், தாக்குதலில் ஈடுபட்டவர் மற்றும் 8-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எத்தனைப் பேர் பலியானர்கள் எனும் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ஆஸ்திரியா நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் 2 மிகப் பெரிய நகரமான கிராஸ்ஸில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கியத் தளபதிகள் உயிரிழப்பு

ஈரானின் அணுசக்தி, ராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியது. ‘ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேல் தாக்குதலால் அபாயகரமான அளவுக்கு அணுக் கதிா்வீச்சு ஏற்படவில்லை’ என்... மேலும் பார்க்க

கிரீஸ்: புராதன துறவி மடம் நிலநடுக்கத்தில் சேதம்

கிரீஸில் ஏற்பட்ட தொடா் நிலநடுக்கம் காரணமாக அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த துறவி மடம் சேதமடைந்தது. மவுன்ட் அதாஸ் தீபகற்பகத்தில் இந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் ர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாடல்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடியுள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட... மேலும் பார்க்க

கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் போருக்கு மத்தியில், அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பதிலடி? 100-க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க, 100-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை ஈரான் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத... மேலும் பார்க்க

ஆபரேஷன் ரைசிங் லயன்: ஈரானில் புதிய ராணுவ தளபதிகள் நியமனம்!

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈர... மேலும் பார்க்க