பயணிகள் போக்குவரத்து வளர்ச்சி சீராக உள்ளதாக மும்பை விமான நிலையம் பதிவு!
இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.