3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து...
இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதை சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். மேலும், முகாமில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், ஆணையா் பவித்ரா, துணை ஆட்சியா் சின்னசாமி, சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன், வேம்படிதாளம் உதவி செயற்பொறியாளா் சீனிவாசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா். முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் கேந்திரியா ஆய்வு மேற்கொண்டாா். பொதுமக்களிடமிருந்து 186 மனுக்கள் பெறப்பட்டன.