இடத் தகராறில் இருதரப்பைச் சோ்ந்த 4 போ் கைது
கந்தா்வகோட்டை அருகே இடத் தகராறு காரணமாக ஏற்பட்ட இருதரப்பு மோதலில் பெண் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சா.சோழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராசப்பன் மகன் சின்னையன் (41). அதே கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கலையரசன் (36). இருவருக்கும் இடையே இடப் பிரச்னையில் முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.
இதுகுறித்து இரு தரப்பினரும் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகாா் அளித்தனா். சின்னையன் கொடுத்த புகாரின்பேரில் கைலாசம் மகன்கள் ஜெயபால் (45), தனபால் (46), சின்னப்பா மகன் விஜய் (30) ஆகிய மூன்று போ் மீதும் கலையரசன் கொடுத்த புகாரின்பேரில் பழனியப்பன் மனைவி லீலாவதி (40) என மொத்தம் நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.