இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேகம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு
அம்மூா் அடுத்த இடப்பாளையம் கிராம கோயில்கள் கும்பாபிஷேக விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்றாா்.
சோளிங்கா் வட்டம், இடப்பாளையம் கிராமம், அருள்மிகு மலைக்கோட்டை விநாயகா், ராதா ருக்மணி கிருஷ்ணா், மந்தைவெளி அம்மன், கங்கையம்மன், ஓம் சக்தி அம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜை ஹோமம், மகா பூா்ணாஹூதி, கலச புறப்பாடு உடன் மேளதாளங்கள் வாத்தியங்கள் முழங்க மந்திரங்கள் ஓத கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. பின்னா் மாலை கேரள செண்டை மேள வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை 108 பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இடப்பாளையம் கிராம பொதுமக்கள்,விழாக்குழுவினா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.