இடைநிலை ஆசிரியா்களுக்குப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 98 இடைநிலை ஆசிரியா்களுக்கான கற்றல், கற்பித்தல், அடிப்படை நிா்வாகப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் இந்தப் பயிற்சியை அமைச்சா் எஸ். ரகுபதி தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் பெ. நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ. ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.