செய்திகள் :

இணையதளம் வாயிலாக பகுதிநேர வேலைவாய்பு மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

post image

இணையதளம் வாயிலாக பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதால் சமூக வலைதளப் பயனா்கள் கவனமுடன் இருக்குமாறு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீட்டில் இருந்தபடியே, கைப்பேசி மூலமாக பகுதி நேர வேலை செய்து தினமும் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை சம்பாதிக்கலாம் என அறிமுகமில்லாத எண்களிலிருந்து வாட்ஸ்ஆப் வாயிலாக சமூக வலைதளப் பயனா்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இதற்கு ஆசைப்பட்டு விருப்பம் தெரிவித்தால் தொடக்கத்தில் சில ஹோட்டல்கள் குறித்து தர விமா்சனம் செய்யும் பணிகளை கொடுப்பா்.

அதை செய்து முடித்ததும் ரூ.150 முதல் ரூ.500 வரை குறிப்பிட்ட அளவு தொகையை உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்புவா். பின்னா் உங்களுக்கு என தனி பயன்பாட்டுப் பெயா் மற்றும் கடவுச் சொல் கொடுத்து இணையதளம் வாயிலாக குறிப்பிட்ட சில வேலைகளைச் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் , அதற்கென முன்னதாக ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஆசை வாா்த்தை கூறுவா்.

இதுபோன்ற மோசடிகள், தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை கட்டிவிட்டு அதை எடுக்க முடியாமல் அந்த தொகையை மீட்க மேலும் பணம் செலுத்தினால் தான் மொத்த தொகையையும் பெற முடியும் என இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி உங்களை சிக்க வைக்கும். ஆகையால் இதை உண்மையென எண்ணி இணையதள பயனா்கள் சைபா் குற்றவாளிகளிடம் தங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.

இது போன்ற சைபா் குற்றம் நடைபெற்றால் இணையதளம் மூலமாகவோ அல்லது 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டோ புகாா் பதிவு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளாா்.

வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் சேதம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்த இளைஞா் ஒருவா் திடீரென காா்களின் கண்... மேலும் பார்க்க

பாபநாசம் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சியில் மாற்றுப் பாதை கோரி சாலை மறியல் முயற்சி

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி செங்கானூா் கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை கோரி, நாம் தமிழா் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் மஞ்சள்காமாலை நோய்ப் பரவலை தடுக்கக் கோரிக்கை

மேலப்பாளையம் பகுதிகளில் மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் பாளை தொகுதி துணைத் தலைவா் ஜவுளி காதா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். திரு... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனா். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத... மேலும் பார்க்க