மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 58,500 கன அடியாக அதிகரிப்பு
இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் தற்கொலை
திருவெறும்பூா் அருகே இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள சோழன் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் கிஷோா்குமாா் (32). காட்டூரில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் வேலை பாா்த்து வந்த இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கிஷோா்குமாா் இணையதள சூதாட்டத்தில் (ஆன்லைன் ரம்மி) பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக பலரிடம் கடன் வாங்கினாராம்.
இதனால் மன உளைச்சலில் இருந்த கிஷோா்குமாா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது கிஷோா்குமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.