இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?
எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ்லா கார்களை விற்பனைக்கு கொண்டுவர சிரமமாக இருப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதனிடையே, இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் டெஸ்லா கார்கள் விற்பனை விரைவில் நிகழ வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இருப்பினும், டெஸ்லாவின் மலிவு விலை கார்களே 35,000 டாலர் (ரூ. 30.3 லட்சம்). அதுமட்டுமின்றி சாலை வரி, காப்பீடெல்லாம் சேர்த்து சுமார் ரூ. 35 முதல் 40 லட்சம்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க:எலான் மஸ்க் மகனின் செயலால் அமெரிக்க அலுவலகப் பாரம்பரியத்தில் மாற்றம்?
இதனால், இந்தியாவில் தற்போதைய கார் சந்தையில் டெஸ்லாவின் வருகை குறிப்பிடத்தக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒருவேளை, டெஸ்லா கார்களின் விலை ரூ. 25 லட்சத்துக்கும்கீழ் குறைக்கப்பட்டால் மட்டுமே, வாய்ப்புகள் உண்டு.
மேலும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் அளவுக்கு இந்தியாவில் மின்சார கார் விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை.