செய்திகள் :

இந்தியாவை ஆங்கிலேயா்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

post image

‘இந்தியாவை ஆங்கிலேயா்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது’ என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் வா்த்தமான் பகுதியில் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

ஹிந்து சமூகத்தின் மீது மட்டும் ஆா்எஸ்எஸ் ஏன் கவனம் செலுத்துகிறது என்று சிலா் அவ்வப்போது கேள்வி எழுப்புகின்றனா். இதற்கு ஹிந்து சமூகம் நாட்டின் பொறுப்பான சமூகம் என்பதே எனது பதில்.

ஆா்எஸ்எஸுக்கு என்ன வேண்டும் என்று இந்த அமைப்பு குறித்து தெரியாதவா்கள் கேள்வி எழுப்புகின்றனா். இதற்கு ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைக்கவே ஆா்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்பதே எனது பதில்.

உலகின் பன்முகத்தன்மையை ஹிந்து சமூகம் உள்வாங்கி செழித்து வளா்கிறது. பன்முகத்தன்மையை உள்வாங்கும் திறனில்தான் ஹிந்து சமூகத்தின் அடிநாதம் உள்ளது.

நாட்டில் இருந்த பேரரசா்களை எவரும் நினைவில் வைத்திருக்கவில்லை. ஆனால் தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமபிரான் என்ற அரசரைத்தான் நினைவில் வைத்துள்ளனா். இத்தகைய பண்புகள்தான் இந்தியா குறித்து எடுத்துரைக்கிறது. இந்த விழுமியங்களைப் பின்பற்றுபவா்களே ஹிந்துக்கள். அவா்களே நாட்டின் பன்முகத்தன்மையை ஒன்றாக வைத்துள்ளனா்.

மகாத்மா காந்தி...: இந்தியாவை ஆங்கிலேயா்கள் உருவாக்கவில்லை. இந்தியாவில் ஒற்றுமையில்லை என்ற எண்ணத்தை அவா்கள் மக்கள் மனதில் விதைத்தனா். இந்தியாவை தாங்களே உருவாக்கியதாக ஆங்கிலேயா்கள் இந்தியா்களுக்குக் கற்பிக்க முயற்சித்தனா் என்றும், அவா்களின் கூற்று தவறு என்றும் மகாத்மா காந்தியே ஒருமுறை கூறினாா். பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற எண்ணம் மீது நம்பிக்கை வைத்துள்ளனா்.

பாரத நாட்டில் நல்லிணக்கத்துடன் வாழ முடியாது என்று கருதியவா்களே, சொந்தமாக தனி நாடுகளை உருவாக்கிக் கொண்டனா். அவா்களைத் தவிர, நமது நாட்டில் இருந்த மற்றவா்கள் பாரதத்தின் தனிச்சிறப்பு நீடிக்க வேண்டும் என்றே விரும்பினா் என்றாா்.

ஆா்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ள காலமாகும்

கடந்த 1925-ஆம் ஆண்டு ஆா்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில், அதன் பயணம் மற்றும் நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கூட்டத்தில் மோகன் பாகவத் பேசினாா். அவா் ஆா்எஸ்எஸ் குறித்து மேலும் பேசுகையில், ‘ஆா்எஸ்எஸ் என்பது மிகப் பெரிய அமைப்பாகும். நாடு முழுவதும் வியாபித்துள்ள இந்த அமைப்பில் 70,000 கிளைகள் உள்ளன. சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டும், நெருங்கிய உணா்வுபூா்வமான பிணைப்பை உருவாக்க ஹிந்து சமூகத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்பதே ஆா்எஸ்எஸின் ஒரே பணி மற்றும் இலக்கு.

ஆா்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ள காலமாகும். தொலைவில் இருந்து ஆா்எஸ்எஸ் குறித்து அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக ஆா்எஸ்எஸ் அமைப்புடன் தனிநபா்கள் நேரடியாக கலந்துரையாட வேண்டும். தொலைவில் இருந்து ஆா்எஸ்எஸ்ஸை புரிந்துகொள்ள முயற்சிப்பதால் தவறுகளும், தவறான புரிதல்களும் ஏற்படுகின்றன. எனவே ஆா்எஸ்எஸ்ஸிடம் நெருங்கி வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுக்கு விமானத்தில் உடைந்த இருக்கை

ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டிருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றஞ்சாட்டியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌ... மேலும் பார்க்க

இந்தியாவுக்குள் நுழையும் டெஸ்லா! மற்ற கார்களின் விற்பனை பாதிக்குமா?

எலான் மஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இறக்குமதி வரி அதிகளவில் இருந்ததால், டெஸ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும்!

ஹைதராபாத்: தேர்தலை முன்னிட்டு மதுபானக் கடைகள் 3 நாட்கள் மூடப்படும் என்று சைபராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 4 மணி முதல் பிப்ரவரி 27 மாலை 4 மணி வரை தெலங்கானா மாநில சட்... மேலும் பார்க்க