இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?
இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக, இம்மாதம் 25 முதல் 29 வரையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையேதான், இந்தியா மீது டிரம்ப் வரியை விதித்தார்.
மறுஉத்தரவு வரும்வரையில் இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படக் கூடாது என்றும் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், இம்மாதம் நடத்தப்படுவதாய் இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் திட்டமிடப்படலாம் என்று கூறப்படுகிறது.