பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!
`இந்தியா சரியான முடிவெடுக்கும்...' - சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா!
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தன் நாட்டிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து தொடந்து சட்டவிரோத குடியேறிகளுடன் விமானம் பறந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அதிக ராணுவ வீரர்களை அனுப்பியிருக்கிறது. மேலும், புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த அமெரிக்க ராணுவ விமானமே பயன்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில், நேற்று அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம், இந்திய சட்டவிரோத குடியிருப்பாளர்களுடன் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். சட்டவிரோத குடியேறிகளுடன் ராணுவ விமானம் பயணிக்கும் முதல் தொலைதூர நாடு இந்தியாதான் எனக் கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``ஓர் அரசாக அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு இந்தியா தன் ஆதரவைத் தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொலைபேசி வழியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போதே, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிபர் ட்ரம்ப் உரையாடியபோது, இந்தியர்களின் சட்டவிரோத குடியேற்றம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். மேலும், பிரதமர் மோடியுடன் குடியேற்றம் குறித்து விவாதித்ததாகவும், சட்டவிரோத குடியேறிகளை திரும்ப அழைத்துச் செல்வதில் இந்தியா சரியான முடிவெடுக்கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளுடன் விமானம் புறப்பட்டிருக்கிறது.