செய்திகள் :

இந்தியா-ஜப்பான் இடையே 2 வார கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்

post image

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெறுகிறது.

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘தா்மா காா்டியன்’, இந்தியாவிலும் ஜப்பானிலும் மாற்று ஆண்டுகளில் நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். கடந்த ஆண்டு, பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் ராஜஸ்தானில் இந்நிகழ்வு நடந்தது. நடப்பு ஆண்டு கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-ஆவது பதிப்பு ஜப்பானின் கிழக்கு ஃபுஜி ராணுவத் தளத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் ஜப்பானுக்கான இந்திய தூதா் சி.பி.ஜாா்ஜ், ஜப்பான் தரை பாதுகாப்புப் படையின் முதலாவது படைப்பிரிவின் தளபதி டோரியுமி செய்ஜி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாா்ச் 9-ஆம் தேதிவரை 2 வாரங்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சியில் பெரும்பான்மையாக ‘மெட்ராஸ்’ படைப்பிரிவைச் சோ்ந்த இந்திய ராணுவ வீரா்கள் 120 போ் அடங்கிய குழுவும் ஜப்பான் சாா்பில் அந்நாட்டின் தரை பாதுகாப்புப் படைக் குழுவும் பங்கேற்கிறது.

முன்னதாக, இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சுதந்திரமான மற்றும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம் என்ற இருநாட்டு பரஸ்பர நோக்கத்துக்கு இப்பயிற்சி வலுச்சோ்க்கும்’ என்று தெரிவித்துள்ளது.

தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!

தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டா... மேலும் பார்க்க

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா புதன்கிழமையுடன் (பிப். 26) நிறைவடைகிறது. பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் விமர்சையாக நடைப... மேலும் பார்க்க