கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
'இந்தியா 6.7%; உலக நாடுகள் 2.7%' - பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி - காரணம் என்ன?!
2024-25, 2025-26 நிதியாண்டுகளில் இந்திய பொருளாதாரம் 6.7 சதவிகிதம் வளர்ச்சியடையும் என உலக வங்கி கூறியுள்ளது.
கடந்த வாரம் உலக வங்கி வெளியிட்ட 'உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்' என்னும் அறிக்கை படி, 'இந்திய பொருளாதாரம் அடுத்து வரும் இரண்டு நிதியாண்டுகளில் 6.7 சதவிகிதம் வளரும். இது நடப்பு நிதியாண்டை விட, சற்று அதிகமாகும்.
உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இந்த நிதியாண்டுகளில் 2.7 சதவிகிதமாக இருக்கும். இது கொரோனா பேரிடருக்கு முன்பிருந்த வளர்ச்சி விகிதத்தை விட குறைவாகும். கொரோனாவிற்கு முன்பு, உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருந்தது.
வங்காள தேசத்தில் நிலவிவரும் அரசியல் நிலையற்றதன்மையால், வங்காள தேசத்திற்கு அருகில் உள்ள நாடுகளின் வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 4.1 சதவிகிதம் வரை குறையலாம். ஆனால், அடுத்த நிதியாண்டு அதாவது 2025-26-ல் 5.4 சதவிகிதமாக ஏறும்.
அடுத்த இரண்டு நிதியாண்டுகளில், தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும். இந்தியாவை தவிர்த்த இந்த பிராந்தியத்தின் வளர்ச்சி 3.9 சதவிகிதமாக இருக்கும். இதற்கு பாகிஸ்தான், இலங்கை அடைந்துள்ள பொருளாதார மீட்சி முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.