சென்னை: வாடகைத் தாயாக இருக்க போலியான தகவல்; காட்டிக் கொடுத்த குழந்தை - இருவர் கை...
இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா-ஆகாஷ் வேகத்தில் ஆஸி. அணி திணறல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினர். ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
ஆட்டத்தின் பல்வேறுமுறை மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.
252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இன்று(டிச.18) ஆட்டம் தொடங்கியதும் 4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
டிராவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 31 ரன்களில்ல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
2-வது இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.