Vikatan Weekly Quiz: அண்ணாமலை `சபதம்’ டு கோலி `ஸ்லெட்ஜிங்’... இந்த வாரம் பதிலளிக...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, அக்கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்த நாள், கே.டி.கே. தங்கமணியின் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழாவாக வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
வேதாரண்யம் கட்சி அலுவலக வளாகத்தில் 100 கொடிகள் ஏற்றப்பட்டு முழக்கமிடப்பட்டன. இதில், கட்சியின் ஒன்றிய செயலாளா் அ. பாலகுரு, விவசாய சங்க நிா்வாகிகள் காசி. அருளொளி, எம்.ஏ. செங்குட்டுவன், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் மாரி. காா்த்திகேயன், ஊராட்சித் தலைவா் கே. வைத்திலிங்கம், மாதா் சம்மேளனம் நிா்வாகிகள் மு. ஜெயா, ப. ரேணுகா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, ஆதனூா், கருப்பம்புலம், மருதூா், தகடூா், பஞ்சதிக்குளம், தென்னடாா், கரியாப்பட்டினம், தலைஞாயிறு ஊராட்சி பகுதிகள் என பல்வேறு இடங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.