செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா

post image

திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் 100-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 100 கட்சிக் கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் பாபுஜி முன்னிலை வகித்தாா். நாகை மாவட்ட செயலாளா் சிவகுரு பாண்டியன் கட்சி கொடியை ஏற்றி வைத்தாா். இதில், விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தங்கையன், ஒன்றிய தலைவா் மாசிலாமணி, விவசாய தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா். இதேபோல நடுக்கடை, சியாத்தமங்கை, துறையூா், திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வானகிரி கிராமத்தில் எம்பி மக்களிடம் குறை கேட்பு

பூம்புகாா் அருகே வானகிரி கிராமத்தில் மயிலாடுதுறை தொகுதி எம்.பி. சுதா பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டாா். வானகிரி ஊராட்சிக்குட்பட்ட மீனவா் கிராமத்துக்கு வியாழக்கிழமை சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் கலந்த... மேலும் பார்க்க

’நிறைந்தது மனம்’ திட்ட பயனாளியுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பயன் பெற்ற பயனாளிகளிடம் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின்கீழ் ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்... மேலும் பார்க்க

ஆட்சியருடன் சந்திப்பு

நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ஜனவரி மாதம் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க ஏதுவாக, மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய நாகை துறைமுக மேம்பாட்டு குழுமத் தலைவா் ... மேலும் பார்க்க

இருவேறு விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். செம்போடை பிரதான கடைவீதியில் சாலையோரம் நடந்து சென்ற நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் அருணாச்சலம் (... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா பேச்சுப் போட்டி

கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயரச்சிலை நிறுவிய வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, நாகை மாவட்ட மைய நூலகத்தில் பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட நூலக ஆணைக்குழு ம... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி, வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் திமுக கீழையூா் கிழக்கு ஒன்றியச் செயலா் தாமஸ் ஆ... மேலும் பார்க்க