புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கை...
இந்திய சிறுவனுக்கு ரூ.24,000-க்கு சைக்கிள் பரிசளித்த அமெரிக்க யூடியூபர் - நெகிழ்ச்சியான சம்பவம்
அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியும் யூடியூபருமான ஜெ என்பவர் , இந்திய சிறுவன் ஒருவனுக்கு புதிய சைக்கிளைப் பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது நேரலை வீடியோவின்போது சந்தித்த சிறுவனின் உடைந்த சைக்கிளைப் பார்த்து, இந்த உதவியைச் செய்துள்ளார்.

ஜெ (@jaystreazy) என்ற அந்த யூடியூபர், சமர்த் என்ற சிறுவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்தமான ரூ.24,000 மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த பரிசை வாங்குவதற்கு முன்பு, சிறுவனின் பெற்றோரிடம் முறையாக அனுமதி பெற்று அவர்களின் சம்மதத்துடன் இதனைச் செய்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஜெ, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தனது பயண அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார்.
அப்படி ஒரு நாள் அவர் நேரலை வீடியோவில் இருந்தபோது, சமர்த் என்ற சிறுவன் அவரிடம் வந்து இயல்பாகப் பேசத் தொடங்கியுள்ளான். அப்போது, அந்த சிறுவனின் சைக்கிள் பாதி உடைந்த நிலையில் இருப்பதை ஜெ கவனித்துள்ளார்.
நேரலையில் இருந்த பார்வையாளர்கள் பலரும் அந்த சிறுவனுக்குப் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுக்குமாறு ஜெ-யிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து, ஜெ அந்த சிறுவனிடம், "உனக்குப் புதிய சைக்கிள் வேண்டுமா? வா, நாம் போய் வாங்கலாம்" என்று கூறி கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்தமான ரூ.24,000 மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.