செய்திகள் :

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

post image

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.

மேலும் அணி தேர்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலர் தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது அவர்களைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரின் தந்தை சந்தோஷ் ஐயர் முதன்முறையகாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடிக்க ஷ்ரேயாஸ் வேறு என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவரை இந்திய கேப்டனாக்குங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அணியில் தேர்ந்தெடுங்கள்.

அணியில் இருந்து அவரை நீக்கியதால் யாரையும் அவர் குறை கூறமாட்டார். ஆனாலும், உள்ளுக்குள் இயல்பாகவே ஏமாற்றம் அடைந்திருப்பார் என்றார்.

Indian cricket team batter Shreyas Iyer's father - Santosh Iyer - expressed disappointment at his son not getting selected for the Asia Cup 2025.

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

உத்தரகண்டில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனால் பரபரப்பு நிலவியது. உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கங்கன்தீப் சிங் கோலி இயற்பியல் ஆசிரியரா... மேலும் பார்க்க

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.... மேலும் பார்க்க

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

தெலங்கானாவில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 மூத்த தலைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தெலங்கானாவில், இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தண்... மேலும் பார்க்க

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மன... மேலும் பார்க்க

போலி பாலியல் வழக்குகள்: வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய்யான பாலியல் வழக்குகளை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவருக்கு லக்னெள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ... மேலும் பார்க்க