இந்திய மகப்பேறு சங்க துணைத் தலைவராக டாக்டா் என்.பழனியப்பன் தோ்வு
இந்திய மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் கூட்டமைப்பின் துணைத் தலைவராக போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை மருத்துவ நிபுணா் என்.பழனியப்பன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் கூட்டமைப்பில் 45,000 மருத்துவா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். பேறுகால மரணங்களைத் தடுக்கவும், மகப்பேறு சிகிச்சைகளை மேம்படுத்தவும் இந்த அமைப்பு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், அண்மையில் நடைபெற்ற விழாவில் அந்த அமைப்புக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. அதில், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மகப்பேறு துறை தலைவா் டாக்டா் என்.பழனியப்பன் அந்தக் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.