1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ...
இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்கலை. மானியக் குழுவின் பரிந்துரைகளை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் நிருபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தீபக்ராஜ் முன்னிலை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் முகேஷ் வாழ்த்திப் பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநிலப் பல்கலைக் கழகங்களை மறைமுகமாக கட்டுப்படுத்த முயற்சிப்பதை பல்கலை. மானியக் குழு கைவிட வேண்டும். பல்கலை. மானியக் குழுவின் அண்மைக் கால அனைத்துப் பரிந்துரைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.