போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரம் வெளியானது: தகவல்கள்
புது தில்லி: சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பல முக்கிய பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அவர்களில் முக்கியமான பயங்கரவாதிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஷ்கர்-ஏ-தொய்பா பொறுப்பாளராக இருந்த பயங்கரவாதி முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜூண்டால் மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.
முடாசர் காதியான் இறுதிச் சடங்கில்தான் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செய்திருந்தனர். அந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.