கும்பமேளா : உலகின் மிகப்பெரிய பக்தி திருவிழா... கோடிக்கணக்கில் கூடும் பக்தர்கள் ...
இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை அன்று 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிந்தது.
தரவுகளின் அடிப்படையில் மேக்ரோ பொருளாதார எண்கள் வெளியிடப்பட்ட பிறகு உள்நாட்டு பங்குச் சந்தை மீண்டெழுந்தது. இருப்பினும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேளறி வருவதாலும், இந்திய நாணயம் அழுத்தத்தில் இருந்தது.
இதையும் படிக்க: பணவீக்கம் தளர்வு, வங்கி, எரிசக்தி பங்குகள் கொள்முதல் ஆகியவற்றால் மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.57 ஆக தொடங்கி ரூ.86.45 ஆக உச்சம் தொட்ட நிலையில், வர்த்தக முடிவில் ரூ86.62 ஆக முடிந்தது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 8 காசுகள் லாபத்தைப் பதிவு செய்தது.
நேற்றைய வர்த்தகத்தில், ரூபாய் இரண்டு ஆண்டுகளில் வரலாறு காணத அளவில் அதன் வீழ்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.