ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
மும்பை: வலுவான டாலர் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றால், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக வரலாற்று காணாத வகையில் 58 காசுகள் சரிந்து ரூ.86.62 ஆக முடிந்தது.
மேலும், இந்திய ரூபாய் வரலாற்று காணாத வீழ்ச்சியை எட்டியதால், இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் 1,049 புள்ளிகளும், நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிவு!
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.12 ஆக தொடங்கி, இன்ட்ராடேவின் போது 1 காசு நகர்ந்து ரூ.86.11 ஆகவும், முடிவில் 58 காசு இழப்புடன் ரூ.86.62-ஆக முடிந்தது.
டிசம்பர் 30 அன்று ரூ.85.52 ஆக முடிவடைந்த இந்திய ரூபாய், கடந்த இரண்டு வாரங்களில் ஒரு ரூபாய்க்கும் அதிகமாக சரிந்தது.