சென்செக்ஸ் 1,049 புள்ளிகளும், நிஃப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழே சரிந்து முடிவு!
மும்பை : பலவீனமான உலகளாவிய போக்குகள், தடையற்ற அந்நிய நிதி வெளியேற்றம், கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ஒன்றுக்கு $81 உயர்வு, அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளில் ஏற்பட்ட வலுவான மாற்றங்கள் மற்றும் வட்டி விகிதக் குறைப்பு ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வைக் வெகுவாக பாதித்ததால் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 843.67 புள்ளிகள் சரிந்து 76,535.24 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 258.8 புள்ளிகள் சரிந்து 23,172.70 புள்ளிகளாக இருந்தது.
அதே வேளையில், வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,048.90 புள்ளிகள் சரிந்து 76,330.01 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 345.55 புள்ளிகளாக சரிந்து 23,085.95 புள்ளிகளாக நிலைபெற்றது.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஜொமாட்டோ, மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தும் இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் உயர்ந்தும் முடிந்தது.
இன்று 442 பங்குகள் உயர்ந்தும், 3,219 பங்குகள் சரிந்தும், 101 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமானது.
இன்று அனைத்து துறை சாரா குறியீடுகளும் ஒரு சதவீதத்திற்கும் மேலாக சரிந்து முடிவடைந்தது. நிஃப்டி ரியாலிட்டி குறியீடு 6.5 சதவிகிதமும், நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 3 சதவிகிதமும், நிஃப்டி ஆட்டோ 3 சதவிகிதமும், உலோக பங்குகளான டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் மற்றும் வேதாந்தா ஆகியவையும் குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாகியதால் சரிந்தது முடிந்தது.
மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை $81 தாண்டியதை அடுத்து, ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்கர் பெயிண்ட்ஸ், ஷாலிமார் பெயிண்ட்ஸ், அக்ஸோ நோபல், சியட், அப்பல்லோ டயர்ஸ் மற்றும் பி.கே.டி ஆகிய பங்குகள் 3 சதவிகிதம் சரிந்தது.
ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தும், அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று சரிந்து முடிவடைந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ.2,254.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இந்த மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து ரூ.22,194 கோடியை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் $81 உயர்ந்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஆனால் நவம்பர் மாதத்திற்கான இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி தரவு 5.2 சதவிகிதமாக இருப்பது இரண்டாவது காலாண்டில் மந்தநிலையிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதைக் குறிக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்திய தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பர் 2024-ல் ஆறு மாத உயர்வான 5.2 சதவிகிதத்தை எட்டியது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.62 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.