டாடா மோட்டார்ஸுடன் சரஸ்வத் வங்கி ஒப்பந்தம்!
புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை சரஸ்வத் வங்கியுடன் வாகன கடனுக்காக கைகோர்த்துள்ளன.
ஒப்பந்தத்தின்படி, உள் எரிப்பு இயந்திரங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் வாங்க விரும்பும் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி தீர்வுகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:
சரஸ்வத் வங்கியுடனான இந்த கூட்டு நடவடிக்கையானது சரியான திசையில் செல்வதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இது நிதி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் டாடா பயணிகள் மின்சார மொபிலிட்டி தலைமை நிதி அதிகாரியான திமான் குப்தா.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டில் மின்சார வாகன கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான தேர்வை வங்கி வங்கும் என்றார் சரஸ்வத் வங்கியின் தலைவரான கவுதம் தாக்கூர்.