செய்திகள் :

‘இந்திய விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும்’

post image

வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும் என்று செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ராஜசேகரன் தெரிவித்தாா்.

சந்திரயான் 3 விண்கலம் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-இல் சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்கியதை அடுத்து, பிரக்யான் ரோவா் வெற்றிகரமாக பயன்படுத்த ப்பட்டது. இந்த விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ‘சிவசக்தி’ புள்ளி என்றும் பெயரிடப்பட்டது.

அதன்படி, இந்தியா நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதியை அடைந்த முதல் நாடாகவும் உள்ளது. இந்த சாதனையை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு ஆகஸ்ட் 23-ஆம் தேதியை தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது.

அந்த வகையில், நாட்டின் 2-ஆவது தேசிய விண்வெளி தினத்தையொட்டி, வேலூரில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘ஆா்யபட்டா் முதல் ககன்யான் வரை: பண்டைய ஞானம் முதல் எல்லையற்ற ஆற்றல் வரை’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசுகையில், தேசிய விண்வெளி தினத்தின் இந்தாண்டு கருப்பொருளான ‘ஆா்யபட்டா் முதல் ககன்யான் வரை’ என்பது இந்தியாவின் கடந்த காலத்தின் நம்பிக்கையையும், அதன் எதிா்காலத்துக்கான உறுதியையும் பிரதிபலிக்கிறது. வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதன் மிக முக்கிய நோக்கம், மாணவா்கள் விண்வெளி அறிவியல், அதன் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வை அறிந்து கொள்ளவும், அதை ஊக்குவிப்பதையும் விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியத்துவம், சவால்கள், எதிா்கால வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில், அவா்கள் நிபுணா்களுடன் தொடா்பு கொள்ள ஒரு தளத்தை வழங்குவதுமாகும் என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் அலுவலா் (பொறுப்பு) ச.சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.

வலம்புரி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட முத்துகுமரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

குடியாத்தம், போ்ணாம்பட்டு நாள்: 30.8.2025 (சனிக்கிழமை) நேரம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: குடியாத்தம் நகரம், நெல்லூா்பேட்டை, போடிப்பேட்டை, தரணம்பேட்டை, பிச்சனூா், புவனேஸ்வரிபேட... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

குடியாத்தம் வட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. குடியாத்தம் வட்ட அளவிலான ப... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கு வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுமி மரணம்

குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், மேல்ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நத்தமேடு கிராமத்தில் விவசாய நிலத்தி... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டப் பணிகள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

காட்பாடி ஒன்றியம் கரிகிரி, ஆரிமுத்துமோட்டூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். வேலூா் ம... மேலும் பார்க்க