செய்திகள் :

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு!

post image

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2018-19 ஆம் ஆண்டில் 3 ஒருநாள் மற்றும் பல்வேறு டி20 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கௌல் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய 34 வயதான பஞ்சாப்பைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தான் ஓய்வு பெறுவதை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

நானும் தில்லி கேபிடல்ஸும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, ஒன்றிணைந்து வெல்வோம்: கே.எல்.ராகுல்

2008 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து இந்தியாவின் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற அணியில் சித்தார்த் கௌலும் இடம்பெற்றிருந்தார்.

சித்தார்த் கௌல் பஞ்சாப் அணிக்காக மொத்தம் 88 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 111 லிஸ்ட் ஏ போட்டிகளில், வலது கை வேகப்பந்து வீச்சாளர் 145 டி20-களில் 199 விக்கெட்டுகளையும் மற்றொரு 182 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பந்துவீச்சில் அசத்திய மார்கோ யான்சென், 5 பேர் டக் அவுட்; 42 ரன்களில் சுருண்ட இலங்கை!

சித்தார்த் கௌல் 155 விக்கெட்டுகளுடன், விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபியில் 87 போட்டிகளில் விளையாடி 120 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் ரோஹ்தக்கில் ஹரியானா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபியில் போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார்.

விராட் கோலிக்காக ஆர்சிபிக்கு ஆதரவளிக்கிறேன்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்!

வக்ஃப் மசோதா: கூட்டுக் குழு பதவிக் காலம் நீட்டிப்பு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. குழுவின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான... மேலும் பார்க்க

நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கைத் தாக்கும் பலிஸ்டிக் ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. கே4 பிரிவைச் சோ்ந்த இந்த ஏவுகணையில் அணு ஆயுதங்களை செலுத்த முடி... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சவாலான அரசியல் பயணம்!

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் 14-ஆவது முதல்வராக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவா் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்றாா். தலைநகா் ராஞ்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஹேமந்த் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று(நவ... மேலும் பார்க்க

ஜம்மு- காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜம்மு- காஷ்மீரில் இன்று(நவ.28) மாலை 4.19 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், இதனால், யாருக்கும் பொருள் சேதமோ, உயிர்ச்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் ... மேலும் பார்க்க

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம்!

ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.வரி செலுத்துவோருக்கும், பான... மேலும் பார்க்க