Vijay Prashant Kishor சந்திப்பின் பின்னணி? | ADANI -ஐ காப்பாற்ற Trump எடுத்த முட...
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 4% உயர்வு!
2024-ல் இந்திய ஸ்மார்ட்போன்களுக்கான சந்தை 4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச தரவு நிறுவனம் (இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன்) இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2023-ஐ ஒப்பிடுகையில் இது 4% அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முதல் பாதியில் 7% ஸ்மார்ட்போன்கள் விற்பனையானதாகவும், பிற்பாதியில் 2% விற்பனையானதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5 காலாண்டுகளாக வளர்ச்சியை சந்தித்துவந்த நிலையில் 2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் 3.6 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை மந்தமாகியுள்ளது. இது மொத்த விற்பனையில் 3% ஆகும்.
2024-ல் ஆப்பிள் போன்களை அதிகம் விற்பனை செய்த நாடுகளில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இது கடந்த ஆண்டை விட 35% அதிகமாகும்.
இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 13 ஆகியவை அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாடல்களாகும்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் விற்பனையானது விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்தான். 2024-ல் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 16.6% விவோ நிறுவனத்துடையவை. இதற்கு அடுத்தபடியாக சாம்சங் ஸ்மார்ட்போன் 13.2%, ஓப்போ ஸ்மார்ட்போன் 10.4%, ஸியோமி 12%, ரியல்மீ 11%, ஆப்பிள் 8.2% விற்பனையாகியுள்ளன.
தொடர்ந்து மோட்டோரோலா 6%, போகோ 5.6%, ஒன்பிளஸ் 3.9%, ஐகியூ 3.3% விற்பனையாகியுள்ளன.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/g0u4ytsf/IDC_India_s_Smartphone_Market_Grew_4__in_2024_to_151_million_Units___2025_Feb__F_1.jpg)