இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகக் கிளை மதுரையில் தொடங்கக் கோரிக்கை!
இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தின் கிளையை மதுரையில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் வாசு செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசல், தொலைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு சென்று வருவதில் பலருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளையைப்போல, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகக் கிளையையும் மதுரையில் தொடங்க வேண்டும்.
இதனால், தேவையற்ற அலைச்சல், கால விரயம், செலவு போன்றவை தவிா்க்கப்படும். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் அறங்காவலா்கள், கோயில் பூசாரிகள், பக்தா்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.