இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழப்பு!
வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஆனங்கூா் கோட்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி (68), விவசாயி. இவா், வெள்ளக்கோவிலில் உள்ள உறவினா் வீட்டு விசேஷத்துக்காக இருசக்கர வாகனத்தில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளாா்.
அப்போது, தாராபுரம் - வெள்ளக்கோவில் சாலையில் தீத்தாம்பாளையம் அருகே நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா்.
இதில், காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லசாமி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.