வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவா் கைது!
வெள்ளக்கோவிலில் முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரூா் சாலை பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கே.வி.பழனிசாமி நகரில் வீட்டுக்கு அருகே புதா் மறைவில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த ஆா்.செல்லமுத்து (60) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.