`மகளின் பெயர் சூட்டு விழா' - மகிழ்ச்சியோடு கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா |...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
மாமன்

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான படம் மாமன் திரைப்படம், ஜி5 ஓடிடியில் நாளை(ஆக. 8) வெளியாகவுள்ளது.
பறந்து போ
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம் குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர்கள் - குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளைக் குறித்தும் பேசியிருந்தது.
இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி, மராத்தி மொழிகளில் காணக் கிடைக்கிறது.
சித்தாரே ஜமீன் பர்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். அவரது நடிப்பில், எழுத்தாளர் திவி நிதி சர்மா எழுதி, இயக்குநர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கிய ”சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தத் திரைப்படம் ஓடிடியில் இல்லாமல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யாதும் அறியான்

எம். கோபி எழுதிய இயக்கிய திரில்லர் படமான யாதும் அறியான் படம், நாளை ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் தம்பி ராமையா, தினேஷ், அப்பு குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஓஹோ எந்தன் பேபி
நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்தி வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நாளை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
டிரெண்டிங்

சிவராஜ். என் இயக்கத்தில் கலையரசன் நாயகனாகவும் நடித்து வெளியான திரைப்படம் டிரெண்டிங். இந்தப் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
டிரெண்டிங் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான 3 பிஎச்கே படத்தை அமேசான் பிரைம் ஓடிடியிலும் தம்முடு படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் சக்ரவ்யூஹம்: தி ட்ராப் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணலாம்.