வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் அமீத் கோலானி இயக்கத்தில் நிமிஷா நாயர், காந்தர்வ் திவான் உள்ளிட்டோர் நடித்து வெளியான லாக் அவுட் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 18) வெளியாகிறது.
காதல் என்பது பொதுவுடைமை திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பெப்பின் ஜார்ஜ் இயக்த்தில் ரூபா கொடுவாயூர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான எமகாதகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜென்டில்வுமன் படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ஸ்வீட்ஹார்ட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் பெருசு திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியுலும் படவா படத்தை சிம்பிளி செளத் ஓடிடியிலும் காணலாம்.