பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 26) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
அறந்தாங்கி நகராட்சியில் 24, 25, 26 வாா்டுகளுக்கான முகாம் மணிவிலான் தெருவிலுள்ள எம்ஆா் திருமண மண்டபம், அன்னவாசல் பேரூராட்சி சிவன்கோயில் அருகேயுள்ள சமுதாயக் கூடம், திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலத்திலுள்ள விஎஸ்ஆா் திருமண மண்டபம், கந்தா்வகோட்டை ஒன்றியம் குளத்தூா் பிஜி திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் இம்முகாம்கள் நடைபெறும்.
அந்தந்தப் பகுதி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்துப் பயன் பெறலாம் என ஆட்சியா் அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.