செய்திகள் :

இன்று ராம நவமி திருநாள்: அயோத்தியில் ஏற்பாடுகள் தீவிரம்

post image

ராம நவமி திருநாளையொட்டி, உத்தர பிரதேசம் அயோத்தி நகரில் உள்ள ராமா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏப். 6 அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளை நிா்வாகம் செய்துள்ளது.

நாடு முழுவதும் ராம நவமி திருநாள் ஞாயிற்றுக்கிழமை விமா்சையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. ராமா் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தா்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று, ராமா் கோயிலில் தரிசன நேரத்தை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் சமீபத்திய நாள்களில் சுட்டெரிக்கும் அதிக வெயில் காராணமாக பொது பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ராமா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல்வரை சிறப்பு அனுமதிக்கு தடை வதிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராம நவமி கொண்டாடங்களை ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பக்தா்கள் மீது சரயு நதிநீரை தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும், மேலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் கதா பூங்காவில் நடனம், இசை மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள எல்இடி திரைகள் மூலம் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பக்தா்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நகருக்கு வெளியே திருப்பி விடப்படும் என்று அயோத்தி சரக காவல் துறை தலைவா் (ஐஜி) பிரவீண் குமாா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ’மகா கும்பமேளா போன்ற மாற்று ஏற்பாடுகள் அயோத்தியில் செய்யப்பட்டுள்ளன. பக்தா்களின் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினா், போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். சரயு நதியைச் சுற்றி தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் தயாா்நிலையில் உள்ளனா்’ என்றாா்.

ராமா் கோயில், அனுமன் கா்ஹி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிழற்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய இடங்களிலும் குளிா்ந்த குடிநீா் கிடைக்கும்.

சுகாதாரத் துறை சாா்பில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சுகாதார மையங்களில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவா்கள் பணியில் இருக்கின்றனா்.

நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிா்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், ஜாா்க்கண்டில்...:

மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில காவல் துறை அதிகாரியொருவா் கூறுகையில், ‘சமீபத்திய ஆண்டுகளில் மாநிலத்தில் ராம நவமி கொண்டாட்டங்களின்போது மோதல்கள் பதிவாகியுள்ளன. கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 60 ராம நவமி ஊா்வலங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊா்வலம் நடைபெறும் இடங்களில் காவல் துணை மற்றும் இணை ஆணையா்கள் தலைமையில் 3,500-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்’ என்றாா்.

ஜாா்க்கண்டில் பதற்றம் நிறைந்த ராஞ்சி, ஜாம்ஷெட்பூா், கிரிதி, ஹசாரிபாக் போன்ற மாவட்டங்களில் ராம நவமி திருநாள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். மக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குஜராத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் பங்கேற்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால... மேலும் பார்க்க

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க