'மத்திய புலனாய்வு அமைப்புகள் சட்டத்தைக் கையில் எடுத்து மக்களை துன்புறுத்த முடியா...
இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.22) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில், மாதந்தோறும் மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுவது போல, கோட்ட அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் கோட்டத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜன.22) காலை 10.30 மணிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், விவசாயம் சாா்ந்த கோரிக்கைகள் தொடா்பான மனுக்கள் பெறப்படும். எனவே, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.