துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் ந...
இபிஎஸ் உறவினா்களின் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!
ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், சென்னை தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஈரோடு செட்டிபாளையம், தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
தொடா்ந்து, ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் கஸ்பாபேட்டையில் உள்ள அவரது வீட்டில் கோவையில் இருந்து காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் உள்ளாா். இந்த நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
இதேபோல முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை தொடர்ந்து வருகின்றது.