இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
சென்னை : திரைப்பட இயக்குநர் எஸ். ஷங்கரின் சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன.
ஷங்கருக்கு சொந்தமான ரூ. 10 கோடியிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கிய புதிய திரைப்படங்கள் சில சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அவரது இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு திரைப்படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.