`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃப...
இயற்கை தேன் ஏற்றுமதி கட்டுப்பாடு ஓராண்டுக்கு நீட்டிப்பு
புது தில்லி: இயற்கை தேன் ஏற்றுமதிக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதன்படி ஒரு டன் இயற்கை தேன் 2,000 அமெரிக்க டாலருக்கு குறைவான விலையில் ஏற்றுமதி செய்யக் கூடாது. உள்நாட்டில் தேனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயா்ந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாா்ச் மாதம் இந்த கட்டுப்பாட்டை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அறிவித்தது. செவ்வாய்க்கிழமையுடன் (டிச.31) இந்தக் கட்டுப்பாடு முடிவுக்கு வர இருந்த நிலையில் 2025 டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய இயற்கை தேன் அதிகஅளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து 106.3 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.906 கோடி) மதிப்பில் இயற்கைத் தேன் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2023-24 நிதியாண்டில் இது 177.6 மில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.1,513 கோடி), 2022-23 நிதியாண்டில் 203 மில்லியன் டாலராகவும் (சுமாா் ரூ.1,735 கோடி) இருந்தது.